ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஜோதிடர்களிடம் வருகின்ற பொழுது அவர்கள் எதிர்பார்ப்பில் தன் உடல்நிலையைப் பற்றியது ஒன்றாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயுள்ள மனிதனின் வாழ்வு நாளும் துன்பமுடையதாக இருக்கும்.
மனிதர்களின் உடல்நலம் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்து வாட்டுகிறது.

கப நாடி:
உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது டிஷ்யூவைக் குறிக்கும். அவற்றில் இருக்கும் திரவத்தை சரிசமமாக இருக்கும் நிலையை கட்டுப்படுத்தும். பொதுவாக அனைத்து டிஷ்யூக்களையும் குறிக்கும்.
கபம் அதிகமானால் கப தோஷம் ஏற்படும். தடித்த குட்டையான உருவமைப்புடையவராகவும் இருப்பார்கள். சுரப்பிகள் அதிகமான சுரக்கும் நிலையும், சளித் தொல்லையும் ஏற்படும். நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.
வாத நாடி:
தொண்டையின் செயல்பாடு – நுரையீரல் – இரத்த ஓட்டத்தின் நிலை, மூட்டுகளின் செயல்பாடு, நரம்புகளின் தன்மை, இயக்கம் – செரிமானம் இவற்றிற்கும் பொறுப்பாகும்.
வாதம் அதிகமானால் வாத தோஷம் ஏற்பட்டால் டிஷ்யூ மெதுவாக பாதிக்கப்படும். எந்தவியாதியானாலும் அவை நீடித்து நிலைத்திருக்கும் நிலை ஏற்படும். உடலின் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஏற்படும். இதனால் உடலின் பகுதி இயங்காத நிலையும் படிப்படியாக உருவாகும். உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்.
பித்த நாடி:
உணவில் ஏற்படும் மாறுதலுக்கு அதாவது ஜீரணமாகும் நிலைக்கு காரணமாகும். உடலுக்கு சக்தியை கிரகித்துக்கொடுக்கும் செயலை செய்து வரும். பித்தம் அதிகமானால் பித்த தோஷம் ஏற்படும். செயல்பாட்டில் கட்டுப்பாடில்லாத நிலையை ஏற்படுத்தும். உடலில் வீக்கமும், இரத்த கசிவும் ஏற்படும்.

 

கிரகதத்துவ நாடி

சூரியன் நெருப்பு பித்தம்
சந்திரன் நீர் வாதம், கபம்
செவ்வாய் நெருப்பு பித்தம்
புதன் நிலம் வாதம், பித்தம், கபம்
வியாழன் ஆகாயம் கபம்
சுக்கிரன் நீர் வாதம், கபம்
சனி காற்று வாதம்
இராகு காற்று வாதம்
கேது நெருப்பு பித்தம்

இராசிகள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்.

1 மேஷம் .. தலை மற்றும் மூளையைக் குறிக்கும்.
2. ரிஷபம் .. முகம், பேச்சு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியைக் குறிக்கும்.
3. மிதுனம் .. கழுத்து, தோள் பட்டை, கைகள்.
4 கடகம் .. மார்புப் பகுதி, பெண்களுக்கு மார்பகம்.
5 சிம்மம் .. இருதயம், நாபி மலை நரம்புகளின் தொகுப்பு.
6 கன்னி .. வயிற்றின் மேல் பகுதி முதல் தொப்புள் வரை.
7. துலாம் அடிவயிற்றுப் பகுதி முதல் இடுப்பு வரை.
8 விருச்சிகம் .. வெளிப்புற பிறப்புறுப்புக்கள்.
9 தனுசு .. தொடைப் பகுதி.
10 மகரம் .. முழங்கால் மூட்டுப் பகுதி.
11 கும்பம் .. கால் பகுதி, அதன் தொடர்புடைய பகுதி
12 மீனம் .. பாதம் அதன் தொடர்புடைய பகுதி.

நெருப்பு இராசிகளான: மேஷம், சிம்மம், தனுசு இவை மூன்றும் பித்தத்தைக் குறிக்கும். நில ராசிகளான: ரிஷபம், கன்னி, மகரம் இம்முன்றும் வாதத்தை குறிக்கும். காற்று ராசிகளான: மிதுனம், துலாம், கும்பம் இவை மூன்றும் கலந்த நாடி குறிக்கும். நீர் ராசிகளான: கடகம், விருச்சிகம், மீனம் இவை மூன்றும் கபத்தைக் குறிக்கும்.

நெருப்பு இராசி .. மேஷம் சிம்மம் தனுசு – கிரகம்: சூரியன் செவ்வாய், கேது
நில ராசி .. ரிஷபம், கன்னி, மகரம் – கிரகம்: சனி, ராகு, சந்திரன், சுக்கிரன்
காற்று இராசி .. மிதுனம், துலாம், கும்பம் – கிரகம்: புதன்
நீர் ராசி .. கடகம், விருச்சிகம், மீனம் – கிரகம்: சந்திரன், சுக்கிரன், குரு
மேலே குறிப்பிட்ட இராசிகளில் மேற்குறிப்பிட்ட கிரஹங்கள் இருந்தாலும், பார்த்தாலும் லக்கனத்திற்கு 6, 8, 12ஆம் பாவ அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும் அப்பகுதிகளைக் குறிப்பிடும் உறுப்புகளில் உடலின் பாகத்தில் வியாதிகள் ஏற்படும். உதாரணமாக, மேஷ ராசி தலைப்பகுதியைக் குறிக்கும். இதில் செவ்வாய், சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் பித்தத்தினால் பாதிப்பிற்க்கு உள்ளாவர்.

Leave A Comment

12 + 8 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

பிருஹத் ஜாதக விளக்கம்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்கா வந்தனம்.. அடியேன் பெரிதும் மதிக்கும் ஒரு பிரபல ஜோதிஷர் ஒரு கேள்வியினை கேட்டு அதற்கான காரணத்தினை வினவினார். அக்கேள்வியானது… “பிருஹத் ஜாதகத்தில் ஒரு சந்தேகம் —————————————————– ஜென்ம லக்கினத்தையோ,ஜென்ம ராசியையோ குரு பார்க்கவில்லைவில்லையெனில் ஜாதகரின் தாய் மாற்றானுக்கு பிள்ளை பெற்றுள்ளாள் என்று பிருகத் ஜாதகம் என்னும் மூல நூல் கூறுகிறது” இது சரியா? என்பதே அவருடைய கேள்வியாகும். […]

Read More

யோக பங்கமா/பலமா?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவின் கருணையினாலே… நம்மிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறது, அந்த யோகம் இருக்கிறது என ஜோதிஷர்களாகிய நாம் கூறுவதுண்டு. மனோரீதியாக பார்த்தால் இந்த வார்த்தைகள் ஜாதகருக்கு நல்ல திடசிந்தனையையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என்பது உண்மையாகத்தான் இருக்கிறது. எனினும் ஜாதகருடைய பலத்தினை ஜோதிஷர்களாகிய நாம் அறியவேண்டியதும் அவசியமாகிறது. யோகம் என்ற வார்த்தைக்கு இணைவு என்று பொருள். […]

Read More