ஒரு செயலைத் தொடங்கும்போது, அந்த செயல் வெற்றிகரமாக முடியுமா? அல்லது அந்த செயலில் தடைகள் ஏதாவது ஏற்படுமா? என்பதை தெரிந்து கொள்ள தேங்காய் சகுனம் பார்க்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

தேங்காய் சகுனம் பார்க்க விரும்புவோர் நன்கு முற்றிய தேங்காயை எடுத்துக் கொண்டு, விநாயகப் பெருமானை வணங்கி, வழிபட்டு, தேங்காயை உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்கும்போது, தேங்காய் எப்படி உடைகிறது என்பதைக் கவனித்து பலாபலன்களை அறியலாம்.

1. தேங்காய் உடைபட்டு, அதன் குடுமிபாகம் சிறுத்து, வட்டமாய் உடைந்திருந்தால், சகுனம் பார்ப்பவருக்கு செல்வச் சேர்க்கை உண்டாகும்.
2. தேங்காய் ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்.
3. தேங்காய் சரிசமமாக உடைந்தால் செல்வம் பெருகும். துன்பம் தீரும்.
4. மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
5. தேங்காய் பொடிப்பொடியாக உடைந்தால் லாபம் கிடைக்கும்.
6. தேங்காய் உடைக்கும்போது ஓடு தனியாக கழன்றால் துன்பங்கள் வரும்.
7. தேங்காய் உடைக்கும்போது குடுமிபாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம் உண்டாகும்.
8. தேங்காய் உடைக்கும்போது ஓட்டின் கண்ணீல் தேங்காய் தெரிந்தால் மரணம் உண்டாகும்.
9. தேங்காய் உடைக்கும்போது கைப்பிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம், பொருள் இழப்பு ஏற்படும்.
10. தேங்காய் நீளவாக்கில் உடைந்தால் செல்வம் நீங்கி துன்பம் உண்டாகும்.
11. தேங்காய் உடைக்கும்போது, அழுகிக் காணப்பட்டால் கார்ய தோல்வி உண்டாகும்.
12. தேங்காய் உடைக்கும்போது, முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு, அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால், நோய்களினால் துன்பம் உண்டாகும்.
13. தேங்காய் உடைக்கும்போது தேங்காயின் சிறு சிதறல் தெறித்து விழுந்தால் செல்வமும், செல்வாக்கும் உண்டாகும். ஆபரண லாபம் உண்டாகும்.
14. ஆலயத்தில் வேண்டுதல் செய்து கொண்டிருக்கும் போது தேங்காய் உடைக்கும் ஒலி கேட்டால் கார்யம் வெற்றி பெறும்.

1 Comment

  1. shanmugam

    சார் யுவர் சர்வீஸ் இச் வெரி ஹெல்ப்புல் சார் தன்கிங் யு சார் வென் வில்ல்பே கெட் இட் மீ ற்றன்ச்பிர் தமிழ்நாடு ப்ளீஸ் ரெப்ல்ய் டு மீ சார்.

Leave A Comment

18 − fifteen =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

பூ பிரஸ்னம்

Parasari Dr. B. Ayyappa Sharma

மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா? என்ற கேள்வியுடன் இவ்வாரூடம் பார்க்கப்படுகிறது. இதில் பூவரசு இலைக்குள் வெள்ளை நிறப் பூக்கள் மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும், சிவப்பு நிறப் பூக்களை மட்டும் வைத்து தனி பொட்டலங்களாகவும் கட்டி, இப்பொட்டலங்களை ஒரு தாம்பூலத்தில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி குல தெய்வத்தையும், இஷ்ட தெயவத்தையும் மனதார வேண்டி, அப்பொட்டலங்களில் ஒன்றை கையில் எடுத்து […]

Read More

பிரஸ்னம் ஓர் அறிமுகம்

Parasari Dr. B. Ayyappa Sharma

பிரஸ்னம் என்பது ஒருவா; நம்மிடம் வந்து ஒரு கேள்வி கேட்கும் நேரத்தின் கிரஹநிலைகளை தொடர்புடைய பலவித பிரஸ்ன முறையுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பலன் கூறுவதாகும். பிரஸ்னத்தில் பலவித முறைகள் உண்டு அவை 1 சோழிப் பிரஸ்னம்: சோழிகளை வைத்து பலன் கூறுவது. 2 தாம்பூலப் பிரஸ்னம் வெற்றிலைகளை வைத்து பலன் கூறுவது. 3 நாளிகேரப் பிரஸ்னம் தேங்காயை வைத்து […]

Read More