தசா முறை அறிமுகம்.
ஜோதிடக்கலை உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் அந்த நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்குத் தகுந்தவாறு வளர்ச்சி கொண்டுள்ளது. ஜோதிடத்தில் ஜாதக பலன் காண்பது என்பது ஓர் சிறந்த கலை. ஜாதக பலன் காண பல நாட்டில் பல்வேறு முறையைக் கண்டறிந்து பலன் காணுகின்றனர். நமது இந்தியத் திருநாட்டில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஜோதிடம் பல மடங்கு உயர்ந்து சிறந்து விளங்குகிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக நமது நாட்டில் காணப்படும் பராசரா முறை போன்றவை விளங்குகின்றன. எந்த நாட்டிலும் இல்லாத, எந்த ஜோதிடத்திலும் இல்லாத ஓர் சிறப்பு அம்சம் நமது ஜோதிடத்தில் காணப்படுகிறது என்றால், அது தசா புக்தி பலன் அறியும் முறை என்று கருதலாம். இது தோன்றிய விதம், இதன் பல்வேறு வகையான தசாபுத்தி அமைப்புக்கள் முழுவதுமாக அறியப்படவில்லை என்றாலும், ஜாதகத்தில் இதன் பயன்பாடு, பலன் தரும் விதம் வியக்கத்தக்கதாக இருக்கிறது.
பொதுவாக ஓர் ஜாதகக் கட்டத்தில் இராசிகளையும், கிரகங்களையும், நட்சத்திரங்களையும் மற்ற பல விஷயங்ளையும் வைத்து பலன் காணும்போது அவை நடைபெறும் கால கட்டங்களை அறிய இந்த தசா, புத்தி அளவுகள், அவற்றின் கோச்சாரங்கள் மிகப் பெரிய அளவில் பலன் கொடுக்கின்றன.
நமது நாட்டில் ஜோதிடத்தில் காணப்படும் பல்வேறு தசா புத்தி முறைகள் நடைமுறையில் இருந்தாலும் தற்காலத்தில் விம்ஷோத்திரி மஹா தசையே அதிக அளவு கையாளப்படுகிறது.
பராசரா ரிஷி விம்சோத்திரி தசையைப் போல் 30 க்கும் மேற்பட்ட தசைகளைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். இதில் பல கிரகங்களின் தசைகளாகவும், பல இராசிகளின் தசைகளாகவும் இருக்கின்றன. தசைகள் குறிப்பாக சந்திரன் நின்ற நக்ஷத்திரத்தின் அடிப்படையில் அமைகின்ற தசைகள் நக்ஷத்திர தசையாகவும், இராசிகளின் அடிப்படையில் அமைகின்ற தசைகள் இராசிகளின் தசைகளாகவும் இருக்கின்றன.
தசைகள் என்று ஆராயும் போது நக்ஷத்திர தசைகள் முக்கியமானவைகளாகவும் அவைகளில் ஒரு சில எல்லா ஜாதகங்களிலும் எப்போதும் பின்பற்றப்படுகின்ற அமைப்பில் உள்ளன.
அவைகளில் முக்கியமாக:
1. விம்ஷோத்திரி தசை
2. யோகினி தசை
3. நாராயண தசை
4. காலச்சக்கர தசை முக்கிய இடத்தில் இருக்கின்றன
இவைகள் தவிர பலதரப்பட்ட தசைகளை இந்திய ஜோதிடத்தில் காண முடிகிறது. இவைகளை சில குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இவைகளை நிபந்தனை தசா எனவும் அழைக்கலாம்.
அவைகளின் பெயர்கள் பின் வருமாறு:
1. அஷ்டோத்தரி தசை
2. ஷோடஷோத்தரி தசை
3. துவாதசோத்தரி தசை
4. பஞ்சோத்தரி தசை
5. சதாப்திகா தசை
6. சதுரஷ்டி ஷமா தசை
7. துவிசப்ததி ஷமா தசை
8. ஷஷ்டியாயனி தசை
9. ஷட்திரியம்ஸ சமா தசை
இவைகள் தவிர
1. மாண்டுக்ய தசா
2. சூல தசா
3. யோக தசா
4. திரிக் தசா
5. திரிகோண தசா
6. மூல தசா
7. யோகினி தசா
8. பின்ட தசா
9. நைசர்க்கிய தசா
10. அஷ்டவர்க தசா
11. சுதரர்சன சக்கர தசா
12. பஞ்சக தசா
13. லக்கின கேந்திராதி ராசி தசா
14. வர்ஷ தசா
15. நாராயண தசா
16. தார லக்கின தசா
17.சர தசை
18 ஸ்திர தசை
போன்ற தசைகளை பற்றி பராசரர் குறிப்புகளை கொடுத்துள்ளார்.
Leave a reply