ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

ஜோதிஷம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது

ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
வர்ததினி குல ஸம்பதாம்
பதவி பூர்வ புண்ணியானாம்
லிக்கியதே ஜன்ம பத்திரிகா.

முன் வினைப் பயனில் தான் பிறப்பு ஏற்படுகிறது. முன்வினைப் பயனில் தான் பிழைப்பு ஏற்படுகிறது. நம்முடைய பூர்வ புன்னியம் தான் இப்பிறவியல் நாம் அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கு காரணமாய் அமைகிறது. நாம் செய்கின்ற வினைகளே நமக்கு அடுத்தப் பிறவியைத் தோற்றவிக்கிறது என்பதனை இதன் மூலம் அறிகிறோம்.

ஜோதிஷத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

உலகின் மிக பழைமையானதும் பலவித ஆய்வுக்குப்பட்டு வருவதே இந்திய ஜோதிஷவியல் ஆகும். ஜோதிஷம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஜோ மற்றும் திஷ ஒளியின் படிப்பு என்று பொருள்.
நமது வாழ்வில் விதி தந்த பலனால் எவ்வழியில் சென்றால் வாழ்க்கை வளமானதாக அமையும் என்பதை சிந்தித்துச் செயல்பட தூண்டுவதே ஜோதிஷம். இதற்கு காரணம் யோகமும், காலமும், நேரமுமாகும். யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில கிரகங்களின் சேர்க்கையால். பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடை பெறும் தசாபுத்தி அந்தரம் யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோசார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும். இம்மூன்றும் யோகமான நிலையில் அமையுமானால் எண்ணங்கள் முழுமையாக நிறைவேறும். நினைத்ததெல்லாம் நடைபெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அப்படி இல்லையென்றால் பலன்கள் மாறுபாடாக அமையும்.
ஜோதிஷம் சித்தாந்த பாகம் (கணித பாகம்) பலித பாகம் (பலன் கூறும் பாகம்) என இரு பெரும் பிரிவுகளை உடையது. ஜோதிஷவியலுக்கு முன்னோடியாக கருதப்படும். 18 ரிஷிகள் ஜோதிஷ வளர்ச்சிக்கு மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது. 18 முனிவர்களும் 18 சித்தாந்தகளை அளித்துள்ளார்கள்.
ஜோதிஷச் சாஸ்திரம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவை கணிதம், சம்ஹிதா, ஹோரா ஆகியவை ஆகும்.

வேதம் ஆறு அங்கங்களை உடையது. அவை யாவன:
1. ஜோதிஷம் – கண்களையும்
2. கல்பம் – கைகளையும்
3. நிருத்தம் – காதையும்
4. சிட்சை – மூக்கையும்
5. வியாகரணம் – முகத்தையும்
6. சந்தஸ் –கால் பாத்தையும் குறிக்கும்.

வேதத்தின் கண்களாக விளங்குவது ஜோதிஷம் ஆகும்.
ஜோதிஷம் மூன்று பிரிவுகள் :
1. கணித ஸ்கந்தம் : கோளங்கள் பற்றியும், கணிதம் பற்றியும்,
2. ஹோரா ஸ்கந்தம் : ஜாதகம், ப்ரசன்னம், சகுனம், நிமித்தம்,
முகூர்த்தம் பற்றியும்,
3. சம்ஹிதா ஸ்கந்தம்: சகுனம், வானிலை, மழை, விலங்குகள்
பற்றியும், விவரிக்கின்றன.
ஜோதிஷம் ஆறு அங்கங்களைக் கொண்டது:
1. கணிதம் : கிரகங்களின் இருப்பிடம் நகர்தல் போன்றவை
பற்றிய கணக்கீடுகள்
2. கோளம் : கோள வடிவில் உள்ள கிரகங்கள் அவற்றின் சுழற்சி
பற்றியது,
3. ஜாதகம் : பிறந்த நேரத்து கிரக அடிப்படையில் கணித்து
பரிசீலித்துப் பலன் சொல்வது.
4. ப்ரசன்னம் : ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு விடையை அந்த
நேரத்து கிரக நிலையை வைத்து பதிலளிப்பது.
5. முகூர்த்தம்: எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது
இருக்கும் கிரக நிலையை குறிப்பது.
6. நிமித்தம் : சகுனங்கள் உடல் அசைவுகள், மனிதனின்
நடத்தைகள், விலங்குகள், மற்றும் இயற்கை
நிகழ்வுகள்.
மனிதன் தன் பரம்பரை மற்றும் வளரும் சூழ்நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாகச் சொல்லுவதுண்டு. ஆனால் ஜோதிஷ சாஸ்திரம் இவன் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளால் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த கிரகங்களே நமது வாழ்நாளின் அடிப்படை சக்திகள். அவையே நம்மை இயக்குகின்றன இந்த கிரகங்கள் தாம் இருக்கும் நிலை பொருத்தும், தங்களுக்குள் உள்ள தொடர்புகள் பொருத்தும் பல்வேறு சக்திகளைப் பெறுகின்றன. இவை ஒன்று சேர்ந்து நடத்தும் வழியிலேயே வாழ்க்கை நடக்கிறது.

Leave A Comment

11 − 9 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

தமிழ் வருஷங்கள் பிரபவ முதல் அக்‌ஷய வரையில் ஆங்கில வருஷங்கள் விவரங்கள்   1 பிரபவ 1867 – 1868 1927– 1928 1987– 1988 2 விபவ 1868 – 1869 1928– 1929 1988– 1989 3 சுக்கில 1869 – 1870 1929– 1930 1989– 1990 4 பிரமோதுத 1870 – 1871 […]

Read More

லக்ன கணிதம் மற்றும் பிறந்த நக்ஷத்திரம்

Parasari Dr. B. Ayyappa Sharma

லக்ன கணிதம்   மற்றும்   பிறந்த நக்ஷத்திரம்   லக்னம் என்பது குழந்தைப் பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 12 லக்கினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகின்றன. சுமாராக ஒரு லக்னம் 2 மணி நேர கால அளவு கொண்டதாகும்.  ஒரு நாளில் குழந்தை எந்த நேரத்தில் பிறக்கின்றதோ அந்த நேரத்தில் […]

Read More