பல மருத்துவப் பிரிவுகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கமே நோய் தீர வேண்டும் என்பதே ஆகும். இதில் எந்த மருத்துவப் பிரிவு ஒரு குறிப்பிட்ட ஜாதகருக்கு சிறந்தது என்பதை கிரஹங்களின் தொடர்புபடுத்தி பார்கலாம்.
சூரியனுடைய வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் யுனானி மருத்துவத்தால் நோய் குணமாகும்.
சந்திரனின் வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் ஹோமியோபதி மருத்துவத்தால் நோய் குணமாகும்.
செவ்வாயின் வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ஆம் அதிபதி இருந்தால் அலோபதி (ஆங்கில மருத்துவம்) மற்றும் நவீன கருவிகளின் மருத்துவ சிகிச்சையில் நோய் குணமாகும்
புதன் சாரத்தில், வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் வர்மக்கலை, ரெயிக்கி மற்றும் தொடுவர்மம் போன்ற மருத்துவ சிகிச்சையால் நோய் குணமாகும்.
:
குருவின் சாரத்தில், வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் பரம்பரை சித்த, ஆயுர்வேத வைத்திய மருந்துகளால் ஆன பஸ்பங்களின் மூலம் நோய் குணமாகும்.
சுக்கிரனின் சாரத்தில், வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் அரிதற்கரிய மூலிகை மருத்துவத்தால் நோய் குணமாகும்.
சனி சாரத்தில், வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ம் அதிபதி இருந்தால் மகான் சாது, சந்நியாசி, ஜீவ சமாதிகளின் அருளை பெறுதல் மூலமும், ஜலநதி தீரத்தில் நீராடுவதாலும் குணமாகும்.
இராகு, கேதுக்களின் சாரத்தில், வீட்டில் அல்லது பார்வை, சேர்க்கை, இணைவு, தொடர்பு பெற்று 6ஆம் அதிபதி இருந்தால், ரசாயன மற்றும் மாந்தீரிக முறையில் நோய் குணமாகும். உணவே மருந்து – மருந்தே உணவு என்பது நம் வைத்திய மேதைகளின் கோட்பாடு. நோய் தோன்றுகின்ற போதே அதைக்கண்டு அறிந்து இயற்கை வைத்தியம் மூலம் குணம் ஆக்க முடியும் என்பது இயற்கை மருத்துவர்களின் வலிமையான வாதமாகும்.
Leave a reply