சூரியன் .. காரம்
சந்திரன் .. உவர்ப்பு
செவ்வாய் .. கசப்பு
புதன் .. பல சுவை
குரு .. இனிப்பு
சுக்கிரன் .. புளிப்பு
சனி .. துவர்ப்பு
உணவால் ஏற்படும் நன்மைகளும் பிரச்சனைகளும்
1. இனிப்பு: உணர்ச்சியைத் தூண்டும். குளிர்ச்சியைத் தரும். மூத்திரப் பாதையில் ஏற்படும் கோளாற்றை நீக்கும். 2.புளிப்பு: பசியைத் தூண்டும். உமிழ் நீரைப் பெருக்கும்.
3. உப்பு: அணுக்களைச் சுத்தப்படுத்தும். உணர்ச்சிகளைப் பெருக்கும். அதிகமானால் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். . 4.காரம்: அணுக்களைப் பெருக்கும். அதிகமானால் குடலில் புண்களை உண்டாக்கும். முன் கோபத்தைத் தூண்டும்.
5. கசப்பு: கபத்தை போக்கும்.
6. துவர்ப்பு: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.
உண்ணும் உணவின் சுவைக் கேற்பவே ஒருவரது குணமும், மனோ நிலையும் அமைகின்றன. காரமான உணவை உண்பவர்களுக்கு முன் கோபமும், எரிச்சலும் அதிகமாக அமைகின்றன. புளிப்பான உணவை உண்பவர்கள் அறிவாற்றலுடையவர்களாக இருப்பார்கள்.
கிழக்கு நோக்கி உண்பதால் ஆயுள் தோஷம் நீங்கும்.
மேற்கு நோக்கி உண்பதால் பொருள்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.
தெற்கு நோக்கி உண்பதால் புகழ் வந்து சேரும்.
வடக்கு நோக்கி அமர்ந்து உண்பதால் நோய்க்கு ஆளாக நேரிடலாம்.
சுவையும் பரிகாரமும்
ஜாதகருக்கு மோசமான தசா புத்தி நடைபெறும் காலங்களில் அக்கிரஹத்தின் சுவைகேற்ற உணவு பொருட்களை தானமாக கொடுப்பது, காக்கைக்கு வைப்பது மற்றும் ஜலதீரங்களில் கரைப்பது போன்றவை அக்கிரஹத்தின் கெடுபலனை குறைக்கும். உதாரணமாக ரிஷப, துலா லக்ன ஜாதகருக்கு குரு தசை அல்லது புத்தி நடைபெறும் பொழுது இனிப்பு பொருட்களை தானமாக கொடுத்தல் அல்லது பனங்கல்கண்டு தூள்களை கடல் அல்லது ஆற்றில் கலத்தல் குருவின் தீயபலனகளை குறைக்கும்.
Leave a reply