ஜயதுர்காவின் கருணையினாலே!!
ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நிலையை அடைய ஆசைப்படுகின்றனர். அது அடைந்துவிட்டால் அவர்கள் பரிபூரணம் அடைந்ததாக கருதுகின்றனர் அல்லது முழு நிறைவு அடைகின்றனர். முழு நிறைவு அல்லது பரிபூரணம் என்பது ஆத்ம சிந்தனையை பொறுத்து அமைகிறது. ஆத்ம காரஹன் சூரியன் என்பதால், சூரியன் 12 ராசிகளில் இருக்கும் நிலையை வைத்து ஜாதகரின் இயல்பான ஆத்ம குறிக்கோளை அறியலாம்.இக்குறிக்கோள் ஜாதகரின் அனைத்து செயல்களின் வெளிப்பாடாக அமையும்.
சூரியன் இருக்கும் ராசி
மேஷம்
தலைவனாக வேண்டும் என்பதே இவர்களுடைய குறிக்கோள் ஆகும்.
எதிலும் முதன்மையானதாக இருக்க வேண்டும் என எண்ணம் கொண்டவர்.
ரிஷபம்
தன்னை பாதுகாத்து கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருப்பார் அதில் நிம்மதி பெறுவார். தன்னை காத்துக்கொள்ளல் அல்லது தற்காப்பு என்பது இவர்களுடைய ஆத்ம குறிக்கோள் ஆகும்.
மிதுனம்
பல நபர்களிடம் நட்பு வைத்துக்கொள்வதில், பலரிடம் பழகுவதில் நிறைவு அடைபவர். அனைவரிடமும் தானகவே பழகுபவர். பழகியவர்களுக்காக எதையும் செய்யலாம் என குறிக்கோள் உடையவர்.
கடகம்
உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் நாட்டம் கொண்டவர். அதிலே பூரணத்தை காண்பவர்.
சிம்மம்.
எதையாவது புதியதாக உருவாக்க வேண்டும் என்பதில் குறிக்கோள் உடையவர். தன்னை முன்னிலை படுத்தி காண்பிப்பதில் மிகவும் அபிலாஷை உடையவர்.
கன்னி
நேர்த்தி மற்றும் தவறற்ற நிலையை அடைவதில் பரிபூரணம் அடைபவர். தன்னை எதிலும் முழு ஈடுப்பாட்டுடன் ஈடுபடுத்தி கொள்வதே இவரின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
துலாம்
எல்லோரிடமும் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதே இவர்களுடைய குறிக்கோள் ஆகும். அனைவரிடமும் அவர்களுடைய மன நிலைக்கு ஏற்றார்போல பழகுவதே இவர்களுக்கு பூரணம் கொடுக்கும்.
விருச்சிகம்
அதிகாரத்தை பெறுவதே இவர்களுடைய குறிக்கோள் ஆகும். அதிகாரம் செலுத்துவதில் பூரணம் அடைவர்.
தனுசு
அறிவை பெறுவதில், எதையும் ஆராய்ந்து தேடுவதில் குறிக்கோள் உடையவர். ஞான, விஞ்ஞான மெய்யறிவு பெற்றால் பூரணம் அடைவார்
மகரம்
நேர்மை, ஒழுங்கு இவற்றை கடைப்பிடிப்பதில் முழு நிறைவு அடைவர். நேர்மையாக இருக்கவேண்டும் என்பதே முதன்மை குறிக்கோள் ஆகும்.
கும்பம்
உண்மையாக இருப்பதில் பூரணம் அடைவர். அனைத்தையும் அறிந்து கொள்வதில் குறிக்கோள் உடையவர்.
மீனம்
பிறர் மீது பரிவு காட்டுதல் மற்றும் இரக்கம் காட்டுதலில் முழு நிறைவு அடைபவர். அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என குறிக்கோள் உடையவர். பிறரை புரிந்துகொள்வதில்
அதிக அக்கரை காட்டுவர்.
Leave a reply