கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே- என்ற சட்டமுனியின் வாக்கின்படி உடலுக்கும் உலகத்திற்கும் தொடர்புடையது. அதாவது பஞ்சபூத தத்துவத்தால் ஆனதுதான் உடல். பஞ்சபூதம் என்பது நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று என்பவைதான் அவை. இதில் ஒவ்வொரு கோள்களுக்கும் இப்பஞ்ச பூத தத்துவம் நிறைந்துள்ளது. அவ்வாறே உடலுக்கும் கோள்களுக்கும் தொடர்புள்ளதை கீழ் காண்பவை மூலம் அறியலாம்.
சூரியன்:
இருதயம், வலது கண், எலும்புகள், முதுகெலும்பு, பேரா தைராய்டு சுரபி.வெப்ப சம்மந்தமான நோய்கள், சுரம், காய்ச்சல், இருமல், மூல நோய்களுக்கும் சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. வாழ் நாட்கள் முழுவதும் வியாதிகளால் துன்பமடைவது. இருதய வியாதிக்கு முக்கிய காரணம் இவர் தான். பித்தம் தொடர்பான நோய்கள், சூரியன் தாது எலும்பு உறுப்புகளில் உஷ்ணம், வலிப்பு நோய் தருபவர். உடல் வலியுடன் கூடிய காய்ச்சல், ஒற்றைத் தலை வலி, எலும்பு தொடர்பான நோய்கள் திடீரென விழுதல், கண் வயிறு நோய், தலை முடி உதிர்தல், வழுக்கைத் தலை, இள வயதில் நரை, பார்வை குறைபாடு கோளாறு, கண்ணில் பூ விழுதல், இரத்த ஓட்ட பாதிப்பு, எலும்புகளில் பலம் குறைதல், அம்மை வைசூரி, விந்து நீர்த்துப் போதல், மூலம், விஷம், ஆயுதத்தால் ஏறபடும் விபத்துக்கள், தீ புண்கள், தொழு நோய் போன்றவற்வைகளுக்கு சூரியன் தொடர்பு இருக்கிறது.
சந்திரன்:
இடது கண், மார்பகம், கர்ப்பப்பை, கருமுட்டை, இரத்தம், இரத்தத்திலுள்ள செல்கள், அட்ரினல் சுரபி, கப சம்மந்தமான நோய்கள், மனநிலை தொடர்புடைய நோய்களுக்கு சந்திரன் தொடர்பு இருக்கிறது. கண் நோய், தண்ணீரால் ஏற்படும் வியாதிக்கு காரணம் ஆவார். வயிற்றுப் போக்கு, காலரா, இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய், மார்பில் ஏற்படும் பாதிப்பு இவற்றையும் தருபவர். பெண்களுக்கு முறையாக ஏற்படும் மாதவிலக்கிற்கும் இவரும் ஒரு காரண கர்த்தா. சிலேத்தும நோய்கள், இரத்தத்தில் ஏற்படும் கெடுதிகள், உடலில் அதிகமான குளிர்ச்சி, சரும நோய்கள், வயிறு மந்தம், கருப்பை நோய்கள், கபம் கட்டுதல், காச நோய், நரம்பு தளர்ச்சி, மன நிலை பாதித்தல், மாத விடாய் பிரச்சனைகள், ஒவ்வாமை, உடலில் போதிய வளர்ச்சி இன்மை, தூக்கமின்மை, அல்லது அதிகமான உறக்கம், தொடர் இருமல், புளித்த ஏப்பம், குறைந்த இரத்த அழுத்தம், நுரையீரல் நோய், காக்காய் வலிப்பு, வெள்ளை அணுக்கள் குறைந்து சிகப்பு அணுக்கள் அதிகரித்தல், உணர்ச்சிகள், இரத்தம் கெட்டுப் போதல், நீரால் ஆபத்து, வயிற்றுப் போக்கு, மந்தமான நிலை, நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் போன்றவற்வைகளுக்கு சந்திரன் தொடர்பு இருக்கிறது
செவ்வாய்:
தலை, மூளை, முன் கை. எலும்பினுள் இருக்கும் திரவம், இரத்தத்திலுள்ள ஹிமோ குளோபின், சதைகள், விந்து சுரபி, தீக்காயம், இரத்த சம்மந்தமான பாதிப்புக்களுக்கும், வெட்டுக் காயங்களுக்கும் செவ்வாய்க்கும் தொடர்பு இருக்கிறது. விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பையும், அதனால் ஏற்படும் காயங்கள். எலும்பு முறிவு. உடலில் ஏற்படும் நெருப்பு காயங்களுக்கு இவரே காரணமானவர். ஆயுதங்களால் ஏற்படும் காயங்கள். அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தோலில் ஏற்படும் வெடிப்புகள் அதனால் ஏற்படும் பாதிப்பு. தலையில் ஏற்படும் காயங்கள். உயர் இரத்த அழுத்த நோய். அம்மை நோய், காயங்கள், இவற்றைத் தருபவர். பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு, அதனால் ஏற்படும் பாதிப்பு இவற்றிற்கும் காரணம் இவரே. குறைப் பிரசவம், ஜனன உறுப்புகளில் ஏற்படும் எதிர்பாராத பாதிப்புகள், பித்த சம்பந்தமான நோய்கள், வெட்டுக் காயம், அதிகமான தாகம், தீக்காயம், மஜ்ஜையில் பிரச்சனை, திசுக்கள் சிதைவு, தோல் வறட்சி, கோழைத்தனம், காக்காய் வலிப்பு, வேனற் கட்டிகள், புற்று நோய், விஷ பாதிப்பு, குடல் வால்வு செயல் இழத்தல், பித்த வெடிப்பு, கண் எரிச்சல், அங்க ஹுனம், குஷ்டம், இரத்தம் உறைதல். வெப்பம் தொடர்பான நோய், தொழுநோய், மண்ணீரல் நோய், கண் நோய், தோலின் நிறம் மங்குதல், அரிப்பு, கழுத்துக்கு மேற்பட்ட உடல் உறுப்புகளில் நோய் போன்றவற்வைகளுக்கு செவ்வாய் தொடர்பு இருக்கிறது
புதன்:
நுரையீரல், தொண்டை, மூக்கு, வயிற்றின் முன் பகுதி தோல், சுரபி, நரம்பு சம்மந்தமான நோய்கள், வெண்குட்டம், தோல் வியாதிகளுக்கும் புதனுக்கும் சம்பந்தம் உண்டு . வாத சம்பந்தமான நோயகள், மூளையின் பாதிப்பு, தலை சுற்றுதல், கழுத்தில் பிரச்சனை, மூக்கில் பாதிப்பு, காது கேளாமை, கண் பாதிப்பு, பேச்சில் தடுமாற்றம், தொண்டை வலி, மூக்கில் பிரச்சினை, தோல் நோய், நரம்புத் தளர்ச்சி, வெண்குட்டம், அதிகமான வியர்வை, ஆணின் மலட்டுத் தன்மை, உணர்ச்சிகளால் பாதிப்பு, சளியுடன் கூடிய இருமல், மேகம், சொறி சிரங்குகள். மனச்சலனங்கள், மூக்கு தொண்டை நோய்கள், விஷத்தால் ஆபத்து, திடீரெனக் கீழே விழுதல், வெள்ளைப் புள்ளிகள், தோலில் ஏற்படும் கரும் புள்ளிகள், நரம்பு சம்பந்தமான நோய், இளமைக் காலத்தில் ஏற்படும் நோய்கள், குடலில் ஏற்படும் புண்.போன்றவற்வைகளுக்கு புதன் தொடர்பு இருக்கிறது
.
வியாழன்:
ஈரல், மண்ணீரல், அடிவயிறு, தொடைப்பகுதி, உடலில்ஏற்படும் அதாவது உடலின் பாகத்தில் ஏற்படும் வளர்ச்சி, உடலின் டிஸ்யூ, பிட்யூட்டரி சுரபி, காது சம்மந்தமான நோய்கள், வாய்வு மற்றும் வாத நோய்களுக்கும் வியாழனுக்கும் சம்பந்தமுன்டு.தலை சுற்றல், பூனைக்கண், மஞ்சள் காமாலை, தூக்கம் இன்மை, கொழுப்பில் ஏற்படுகின்ற கோளாறுகள், கொழுப்பு கரைந்து சிறுநீர் மூலமாக வெளிப்படுதல், இதய வலி, காது நோய், காதினுள் பாதிப்பு, அடிக்கடி மயக்கம், குடல் இறக்கம், குன்மம், ஈரல் வீக்கம், பலவீனம், முழங்கால் வலி, உடம்பு எரிச்சல், இரத்த சோகை, வயிற்று போக்கு, வாயு உபத்திரம், மேக ரோகம், சோம்பல் – சோர்வு, கிட்னி பாதிப்பு. மண்ணீரல் பாதிக்கப்படுதல் – காய்ச்சல் காதில் கபம் தொடர்பான நோய் ஏற்படுதல், நீரிழிவு நோய் போன்றவற்வைகளுக்கு குரு தொடர்பு இருக்கிறது
சுக்கிரன்:
உடல் உறவு உறுப்புக்கள், முகம், விந்து, விந்துவின் தன்மை அதில் இருக்கும் உயிர் அணுவின் தன்மை, கணைய சுரபி, சிறுநிரக சம்மந்தமான நோய்கள், பாலியல் மற்றும் பிறப்புறுப்புகளில் தோன்றும் நோய்களுக்கும் சுக்கிரனுக்கும் தொடர்பு இருக்கிறது. சிலேத்தும சம்பந்தமான நோய்கள், நீர்க்கோவை, கண் புரை வளருதல், பார்வைக் குறைவு, கருப்பை பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, மூத்திரப் பையில் கல், ஆண்-பெண் உறுப்பு பலவீனம், வயிற்றில் உண்டாகிற கெடுதல்கள், தும்மல் வியாதி, வெள்ளை-வெள்ளை வெட்டை, பீணிசம், பெண்கள் சம்பந்தமான நோய்கள். விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத் தன்மை, இரத்தக் கொதிப்பு, அதிக உடல் உறவால் பாதிப்பு, சுய இன்பம், உடல் முழுவதும் வெள்ளையாகத் தெரியும் வெண் குஷ்ட நோய், சோம்பேறித்தனம், களைப்படைதல், காது நோய், உடலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்வைகளுக்கு சுக்கிரன் தொடர்பு இருக்கிறது
.
சனி:
கால்கள், ரோமம், நகம், பற்கள், நரம்புகள் மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பு, தைராய்டு சுரபி, பக்கவாதம், மூட்டு வலி, காக்கா வலிப்பு சம்மந்தமான நோய்களுக்கும் சனிக்கும் தொடர்பு இருக்கிறது. வாத சம்பந்தமான நோய்கள், நரம்பு நோய்கள், நரம்புத் தளர்ச்சி, நரம்பு செயல் அற்றுப் போதல், நரம்பு பிடிப்பு, நினைவாற்றல் குறைதல், சித்தம் கலங்குதல், மனக்கவலை, பிரமை நிலை பிடித்தல், வாய்-வயிறு புண் உண்டாகுதல், வயிற்று வலி, கை கால்கள் குடைச்சல், கால்களில் பிரச்சினை, மூட்டு வலி, யானைக் கால், ஊர் சூடு, பக்க வாதம், முடக்கு வாதம், நோயின் தன்மை கூடுதல், புற்று நோய், கட்டிகள், சுரப்பிகளில் கோளாறு, வாயு பிடிப்பு, ஆண்மை இழத்தல், சோம்பேறித்தனம், அதிக உழைப்பால் ஏற்படும் களைப்பு, வயிற்று நோய்கள், வெப்பம் தொடர்பான நோய்கள், தீராத வியாதி, செல் பாதிப்பு, முதுமைக் காலத்தல் ஏற்படும் நோய், காச நோய் போன்றவற்வைகளுக்கு சனி தொடர்பு இருக்கிறது
இராகு:
உணவு குழல், யோனி, முழங்கால், தொழுநோய், சிரங்கு, கரப்பான், ஒவ்வாமை போன்ற பாதிப்புகளுக்கும் ராகுவுக்கும் தொடர்பு இருக்கிறது. மனதில் ஏற்படும் பயம். நோயினால் ஏற்படும் பயம். குஷ்ட நோய், தீராத நோய் இவற்றையும் தருபவர். தோலில் ஏற்படும் பாதிப்பையும் தருபவர். முகத்தில் ஏற்படும் புண், வெடிப்பு இவற்றையும் கொடுப்பவர். சிரங்கு – இதற்கும் காரணமானவரே. பித்த சம்பந்தமான நோய்கள். சனிக்குச் சம்பந்தப்பட்ட நோய்கள். நஞ்சுடன் கலந்து வரும் நோய்கள். கை, கால்கள் செயலற்று போதல், மன நிலை மாற்றம், கவலை, அலட்சியப் போக்கு, வறட்டு இருமல், குடல் நோய், வயிற்றில் புண், புரையோடுதல், கல்லீரல் வீக்கம், இரத்த குழாய்களில் பாதிப்பு, தொழு நோய், கட்டிகள் வளர்ச்சி, விஷம் ஏறுதல், ஒவ்வாமை, பாதங்களில் ஏற்படும் நோய்கள் போன்றவற்வைகளுக்கு ராகு தொடர்பு இருக்கிறது
கேது:
பிடரி, உள்ளங்கால், தோல், விஷக்கடி,வெட்டுக்காயம் அம்மை போன்ற நோய்களுக்கும் கேதுவின் தொடர்பு உடையது. நீண்ட நாட்களாக இருக்கும் காய்ச்சல், விஷக் கிருமிகளால் ஏற்படும் நோய், இரத்தத்தில் செல்களில் ஏற்படும் பாதிப்பு, மேலும் தீராத வியாதியைத் தருபவர். எயிட்ஸ் நோய்க்கு இவரும் ஒரு காரண கர்த்தா. பித்த சம்பந்தமான நோய்கள், செவ்வாய்க்குச் சம்பந்தப்பட்ட நோய்கள், விஷத்துடன் கலந்து வரும் நோய்கள், நிலையற்ற மனம், காது கேளாமை, சுவாசக் கோளாறு, இரத்த அழுத்தம், செரிமானம் இன்மை, கபம், இருமல், குடற்புழு, காய்ச்சல் கூடுதல், உடல் அசதி, வலி, தீராத புண், சீழ் பிடித்த புண், வெட்டுக்காயம், புரையோடுதல், பெரிய அம்மை போன்றவற்வைகளுக்கு கேது தொடர்பு இருக்கிறது
kidney disease 1)ckd -2 what is the solution what kind of food please send me mail.at my gmail