எட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கண்களில் பாதிப்புள்ளவர், மக்கட்பேறு, செல்வமும் இழத்தல், குறைந்த ஆயுள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரிவு, அடிக்கடி துன்பபடுதல்.

எட்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவு, திறமை, புகழ் உள்ளவர், நோய் துன்பம் உள்ளவர், உடலில் அடையாளம் உள்ளவர், தேய்பிறை சந்திரனால் குறைந்த ஆயுள் மற்றும் ஊனம் உள்ளவர்.

எட்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நோய்களால் துன்பபடுதல், குறைந்த ஆயுள், கெட்டுபோன உடல், தன் குலத்திற்கு ஒவ்வாத தொழிலையும் செயலையும் செய்பவர், பல துன்பங்களை அனுபவிப்பார்.

எட்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
பரந்த புகழ், வலிமை, முழு ஆயுள், வம்சத்தின் முக்கியமானவர், அரசர் அல்லது அதற்கினையானவர், உயர்ந்த பதவி வகிப்பவர், சிறந்த பண்பாளர்.

எட்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
செயல்களிலும் தோல்வி, முழு ஆயுள், அடிமைக்காரர் அல்லது கீழான குற்றங்களை செய்தல், தன் மக்கள் கூறுவதைக் கேட்பவர், ஏழ்மை தூய்மை அற்றவர், பெண்களிடம் யோகத்தை அனுபவிப்பவர்.

எட்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

முழு ஆயுள், அனுபவ இன்பமுள்ளவர், பெருஞ்செல்வம் உள்ளவர், அடிக்கடி மகிழ்ச்சியுடையவர், அரசருக்கு இணையானவர், உயர்ந்த நிலை வாழ்வு பெறுபவர்.

எட்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எச்செயலையும் தொடங்குவதற்கு வலிமை இன்மை, குறைவான ஆயுள், சோம்பல் உள்ளவர், குஷ்டம், மூலம், பால்வினை போன்ற நோயால் பாதிக்கப்படுவர், அதிக கவலை உள்ளவர்.

எட்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

ஆயுள் குறைவு, தீய செயல் புரிபவன். உடலில் ஊனம் உண்டு, குறைவான அளவில்தான் குழந்தைகள் பிறக்கும். நிளிஹிஜி என்ற நோயாலும், மூட்டுவலியாலும் பாதிக்கப்படுவன்.

எட்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

குறைவான ஆயுள், நண்பர்களிடமிருந்து பிரிவு, சண்டை சச்சரவு, சண்டைகள் போது ஆயுதத்தால் காயமேற்படல், எடுக்கும் முயற்சிகளில் ஏமாற்றம் உள்ளவர்.

Related Posts

பத்தாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும்....
Read More

பன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த...
Read More

லக்ன பாவத்தில் கிரகங்கள் இருப்பின் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
லக்ன பாவத்தில் சூரியன் இருப்பின் ஏற்படும் பலன் தலைமயிர் குறைந்திருத்தல், தொழில் தேக்கம், சினம், கொடூர குணம், ஏளனம் செய்தல், எனினும் சிலருக்கு விருப்பமானவர், கொடூரமான பார்வை,...
Read More