Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
இராசிகளுக்கு உரிய நோய்கள் |

இராசிகளுக்கு உரிய நோய்கள்

மேஷம்:
பித்தம் சம்பந்தமான நோய்கள், தலை சுற்றல், மூளைப் பகுதியினில் இரத்த அழுத்தம், மூளை வீக்கம், மூளைக் காய்ச்சல், முக வாட்டம், முகத்தில் தழும்புகள், தூக்கமின்மை.

ரிஷபம்:
கபம் சம்பந்தமான நோய்கள். கண் வலி, கண் வீக்கம், கழுத்தினில் சுளுக்கு, பேச்சுத் திறன் குறைதல், தொண்டை வீக்கம், தொண்டைப் புண், உள் நாக்கு வளர்தல், சளி-இருமல், வாய்ப்புண்.

மிதுனம்:
வாத சம்பந்தமான நோய்கள். காது கேளாமை, வலது காதில் தொந்தரவு, நெஞ்சு வலி, நுரையீரலில் புற்று நோய், சளித் தொந்தரவு, சுவாசம் தடைபடுதல், மூக்கில் காயம் – உபாதை, வாதம், பித்தம், கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.

கடகம்:
கபம் சம்பந்தமான நோய்கள். இதய நோய், இரத்தக் குழாய்களில் வெடிப்பு, வயிறு வலி, வாய்வு உபத்திரம், அஜிரணக் கோளாறு, காமாலை, நுரையீரலில் கட்டி, தோள் பட்டை வலி, கவலை கூடுதல், உறக்கம் இன்மை, மனம் பேதலித்தல்.
சிம்மம்:
பித்த சம்பந்தமான நோய்கள். இதய நோய், இதய வால்வு செயல் இழத்தல், செரிமானம் இன்மை, புளித்த ஏப்பம், முதுகுத் தண்டு வட வலி, செரிமானம் இன்மையால் வாந்தி-பேதி, முதுகு கூண் விழுதல்.

கன்னி:
வாத சம்பந்தமான நோய்கள், அடி வயிற்றில் உஷ்ணம், வயிற்றில் இரத்தம் உறைதல், நுரையீரலில் வலி, குடற் புண், இரத்த மூலம், வாந்தி, தலைச்சுற்றல், சிறுநீர் – ஆசன வாயில் புண், மலப் பாதையில் மலம் கழிவதில் தடை.
துலாம்:
கபம் சம்பந்தமான நோய்கள். கர்ப்பப்பைக் கோளாறு, கர்ப்பம் அடிக்கடி கலைதல், மூத்திரப்பை செயல் குறைதல், தோல் ஒவ்வாமை, தோலில் வெடிப்பு, வெடிப்பு, இடுப்பு வலி, குடல் வால்வு பாதிப்பு, பெண்களுக்கு அட்ரீனல் பாதிப்பு, பாதம்-விரல்களில் வலி, வாதம்-பித்தம், கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.

விருச்சிகம்:
பித்தம் சம்பந்தமான நோய்கள், பால் (காம) உணர்வு அதிகம் ஆகுதல், பால்வினை உணர்வு, மூலம், அடி வயிற்றில் வலி, வாய்வுப் பிரச்சினை, நரம்பு தளர்ச்சி, அதிக தூக்கம், சிறுநீர் துவாரத்தில் அடைப்பு, குடல்வாய் நோய், ஹிரண்யா, விந்து – சுரோணிதம் பலம் குறைதல்.

தனுசு:
வாத சம்பந்தமான நோய்கள், மூக்கு-தொண்டையில் புண், இடுப்பு வலி, இடுப்பில் புண், தொடை பெருத்தல், இரத்தக் குழாய்களில் அடைப்பு, மூட்டுப் பிடிப்பு.

மகரம்:
வாத சம்பந்தமான நோய்கள், எலும்பு பலம் குறைதல், முழங்கால் வலி, கீழ்வாத நோய்கள், மூட்டு பிசகுதல், தோல் நோய், நுரையீரல் நோய், மூச்சுத் திணறல், எலும்பு முறிவு உடைந்து போதல்.
கும்பம்:
வாதம் சம்பந்தமான நோய்கள், இடது காது வலி, இரத்த அழுத்தம், இரத்தக் கசிவு, இரத்த நாளங்களில் குறைபாடு, கணுக் கால்களில் பிரச்சினை, கீழ்க்கால்களில் வீக்கம், புண், தமணி கெட்டி ஆகுதல், தசைப் பிடிப்பு, வாதம்-பித்தம்-கபத்தின் கலப்பால் உண்டாகிற நோய்கள்.

மீனம்:
வாதம் சம்பந்தமான நோய்கள், மதுவினால் உண்டாகிற நோய்கள், பாதங்கள் வீங்குதல், குதிங்கால் வாதம், பாத விரல்கள் சுருங்குதல், உரிய காலத்தில் மல-ஜலம் போகாது இருத்தல், காலில் ஆணி, காலில் புண், மூட்டு வலி, உடற்சோர்வு.

One comment to இராசிகளுக்கு உரிய நோய்கள்

  • Manohar  says:

    I have affected pulmononary fibrosis and i m not able to control or cure without propped medicine.
    Kindly contact me or send and a proper solution.
    Thanking you
    Manohar
    98424 04322

    E

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)