பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த எண்ணம் குணமும் நிறைந்தவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எல்லோராலும் தூற்றப்படுபவர், தாழ்ந்த எண்ணம் உடையவர், கருமியாக இருப்பவர், கண்நோய், எதிலும் பற்றின்மை, உடல் ஊணம், வேறுமனிதரின் மகனாயிருத்தல் (தத்து பிள்ளை), அன்றாட செயலால் குறைவுடன் மற்றும் சோம்பலுடன் இருத்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கண்நோய், கண்களுக்கு கெடுதி ஏற்படுதல், ஒதுக்கப்பட்டவர், பெண்ணை வெறுப்பவர், நட்பாகி பின்னர் பகைகொள்ளுபவர், கொடூரன், செயல்களால் தோல்வி தழுவுதல், சிறைசாலை வாழ்க்கை அனுபவித்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நன்றாக தெளிவுடைய வார்த்தையை பயன்படுத்துதல், தோல்வி உள்ளவராகவும், சில வித்தை உடையவராகவும், பல துக்கங்களும் சோம்பலும், நோயும் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சோம்பலுடையவர், தகுதியற்ற மக்களால் ஒதுக்கப்படுதல், அனைவரையும் தூற்றுபவர், கண்டித்து பேசுதல், அனைத்து இடத்திலும் சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செயலாற்றவதில் சோம்பல், இன்பம் அனுபவித்தல், ஒதுக்கப்படுதல், விதவை பெண்களோடு கூடி சுகம் பெறுபவர், பலவகை உணவு உண்பவராகவும், கட்டில் மெத்தை போன்ற நல்ல வசதியுள்ள பொருட்களை சேகரிப்பவராகவும், பெண்களுக்கு அஞ்சுபவராகவும் இருப்பவார்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒதுக்கப்பட்டவர், கூடுதலாக பேசுபவர், ஒரேமாதிரி கண்களற்றவர், தயவு தாட்சியமற்றவர், கூச்சமில்லாதவர், தேவையில்லாமல் பணத்தையும், பொருட்களையும் கூடுதலாக செலவு செய்பவர், மிகுதியான மன குழப்பம் உடையவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் செய்பவர். அதிகமாக செலவழிப்பார். நீரால் ஏற்படும் ஞிஸிளிறிஷிசீ எனும் உடல் வீக்கம் தரும் நோய் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் புரிபவர். அதற்காக பணம் செலவழிப்பவர். செல்வம் அழிவு, தீய நடத்தை, கண் நோய் உள்ளவர்.

Related Posts

கிரஹ வேகம் ஒரு பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்ய துர்காவின் கருணையினாலே… கிரஹங்களின் வேகத்தை பொறுத்து அது சமா,சாரா,அதிசாரா, மந்தா, மந்ததாரா, விகலா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. கிரஹங்களின் சாதாரண வேகத்தை பொதுவாக சமா அல்லது...
Read More

பதினோராம் பாவத்தில் கிரகங்க இருப்பதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை...
Read More

கிரஹங்கள் ஆதிக்கும் செலுத்தும் கால அளவு.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவின் கருணையினாலே… அயந க்ஷண வார ர்து மாஸ பக்ஷ ஸமா த்விஜ । ஸூர்யாதீநாம் க்ரமாஜ்ஜ்ஞேயா நிர்விஶகம் த்விஜோத்தம ॥ [பராசர ஹோரை அத்தியாயம் 3...
Read More