ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும்.

சூரியன்–22 வயது
சந்திரன்–24 வயது
செவ்வாய்–28 வயது
புதன்– 34 வயது
குரு– 16 வயது
சுக்கிரன்–25 வயது
சனி–36 வயது
ராகு– 42 வயது
கேது–48 வயது

இரு கிரங்கள் தொடர்பின் பலனை அறிய இருகிரக வருடத்தை கூட்டி 2 ஆல் வகுக்க கிடைக்கும் வருடத்தில் பலன் நடைபெறும். பலன் நன்மையா, தீமையா என அறிய கிரக பலம் பார்க்கவும்.

குறிப்பிட்ட வயதிலிருந்து எவ்வளவு வருடம் அந்த கிரஹம் செயல்படும் என்பதனை கிரந்தங்களில் சில இடங்களில் கிரங்களுக்கான வருடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இதற்கு எடுத்துக்கொள்ளலாம்

எவ்வளவு வருடம் அந்த கிரஹத்தின் செயல்பாடு இருக்கும் என அறிய அந்த கிரஹத்தின் உட்ச, ஆட்சி, நட்பு, பகை, நீசம் வைத்து தீர்மானிக்க வேண்டும். உட்சம், ஆட்சியாக இருக்கும் போது கீழே கொடுக்கப்பட்ட வருடமும், பகை நீசமாக இருக்கும் போது அதில் பாதிவருடத்தையும் கிரஹங்கள் செயல்படும் காலமாக கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரஹத்திற்கும் எவ்வளவு வருடம் செயல்படும் என்பது ..

சூரியன்–2 வருடம்,
சந்திரன் –1 வருடம்
செவ்வாய்- 6 வருடம்
புதன் –2 வருடம்
குரு –6 வருடம்
சுக்கிரன்–3 வருடம்
சனி –6 வருடம்
ராகு– 6 வருடம்
கேது–3 வருடம் ஆகும்.

இதனை கிரஹங்கள் செயல்படும் வருடமாக எடுத்துக்கொள்ளலாம்
கர்க ஹோரா, பிருகு சூத்திரம், பிருகு நாடி போன்ற பழைய கிரந்தத்தில் இதனை வைத்தே வயதினை குறிப்பிட்டுள்ளனர். மறைந்து போன ஜோதிஷ சூட்சுமத்தில் இதுவும் ஒன்று…..

Related Posts

பன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த...
Read More

வானசாஸ்திரத்தில் நவகிரஹம்

Parasari Dr. B. Ayyappa Sharma
வானசாஸ்திரத்தில் நவகிரஹம் வானசாஸ்திரம் என்பது சூரியன், சந்திரன், கோள்கள், ராகு, கேது, விண்மீன்கள், எரிநக்ஷத்திரங்கள் போன்றவற்றின் நிலை மற்றும் சுழற்சியை  அடிப்படையாக வைத்துக் கொண்டு புயல்,கடல் சீற்றம்,...
Read More

சூரியன்-ஜோதிஷி பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே!! சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களையும் சூரியன் ஒருங்கிணைத்து ஒரு சீரான சுழற்சிக்கு வழி ஏற்படுத்துகிறது. அதுபோலவே நாட்டை ஆள்பவர்களும் மக்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின்...
Read More